திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கருங்கல்பட்டியைச் சேர்ந்த செந்தில்முருகன் ஐஸ்வர்யா தம்பதியின் மகள் தரனேஸ்வரி. இவர் உசிலம்பட்டி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார்
இவர் சம்பவத்தன்று மாலை பள்ளியிலிருந்து ஒரு அரசு பேருந்தில் தனது ஊருக்கு வந்த மாணவி கருங்கல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது காதலனுடன் இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்த பல்சர் பைக், சிறுமி தரனேஸ்வரி மீது பயங்கரமாக மோதியது. இதில் சிறுமி தரனேஸ்வரி தூகி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். வலியால் அலறி துடித்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவி தரனேஸ்வரிக்கு முகத்தில் 16 தையல் போட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் பல்சர் பைக்கை ஓட்டி வந்த பெண் வெல்லம்பட்டியை சேர்ந்த ரேவதி என்பதும், அவருடன் பைக்கில் வந்தது அவரது ஆண் நண்பர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லிங்கசாமி என்பதும் இருவரும் மது போதையில் இருந்ததும் தெரிய வந்ததால் உறவினர்கள் ஆண் நண்பர்க்கு கன்னத்தில் பளார் விட்டனர்
காதலியுடன் காலையிலிருந்து மது அருந்திவிட்டு ஊர் சுற்றிய லிங்கசாமியிடம் எனக்கு பைக் ஓட்ட ஆசையா இருக்கு என்று கூறிய ரேவதியின் ஆசைய நிறைவேற்றுவதாக கூறி அவரிடம் பைக்கை கொடுத்துள்ளார்.
நிறைபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டியபோது சிறுமி மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.