கடந்த 16-03-2024 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் நடத்திய இளையோருக்கான தொழில் சந்தை நிகழ்வு ஸ்காபுறோவில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. ஏராளமான இளையவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அங்கு தங்களுக்கு கிடைக்கக் கூடிய முதலாவது வேலையை பெற்றுக் கொள்ளும் விருப்பத்துடன் அங்கு கலந்து கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.
முக்கிய கனடிய இராணுவ தொழில் வழங்கும் பிரிவு மற்றும் ரொறன்ரோ பொலிஸ் அதிகார சபை உட்பட பல பொது நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் அங்கு சாவடிகளை அமைத்து தொழில் தேடிச் சென்றவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கின.
மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ மாகாணத்தில் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் அவர்களும் அங்கு சமூகமளித்து அனைவரோடு உரையாடி மகிழ்ந்தார்
விஜேய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்தோடு தொடர்பு கொள்ள vijay.thanigasalam@pc.ola.org or by phone at 416-283-8448. ஆகியவற்றை பயன்படுத்தவும்