கனடாவில் ரொரன்ரோ மாநகரில் வாழும் தமிழ் மக்களோடு நெருக்கமான உறவைப் பேணி வருகின்ற இளைய அரசியல்வாதியான நிக் மென்ட்டாஸ் அவர்கள் அண்மையில் ரொரன்ரோ மாநகர சபையின் முதன்மை அதிகாரியின் முன்பாக 22ம் வட்டாரத்தின் புதிய கவுன்சிலராகப் பதவியேற்றுள்ளார்.
நீண்ட கால மேற்படி வட்டாரத்தின் முன்னைய கவுன்சிலர் ஜிம் கரிஜியானிஸ் அவர்ளின் பிரதம அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட நிக் மென்ட்டாஸ் அவர்கள் தனது பதவியின் மூலம் வட்டார மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவார் என்று நம்புவதாக அங்கு வாழும் தமிழ் மக்கள் சிலர் எமது உதயன் ஆசிரிய பீடத்திற்கு எடுத்துரைத்துள்ளனர்.

மேற்படி பதவியேற்பு வைபவத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கவுன்சிலர் நிக் மென்ட்டாஸ் அவர்கள் எனது வெற்றிக்கு காரணமான எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் வாக்காளர்கள் ஆகியோருக்கும் அரசியலில் எனக்கு வழிகாட்டியாக விளங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கவுன்சிலருமான ஜிம் கரிஜியானிஸ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிப்பதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் மகிழ்ச்சியுடன் உரையாடும் போதும் தன்னோடு எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெறலாம் என்றும் அதற்கான தொடர்பு இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் தருவதாகக் குறிப்பிட்டார.
If you have any issues or concerns, please do not hesitate to contact my office at 416-392-1374 or by email at Counillor_Mantas@toronto.ca






















