கனடா வாழ் செந்தூரன் நடராஜா அவர்களை நிறுவனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்று அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம் மார்க்க்ம் நகரில் யோர்க் சினிமாவில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிறப்பிக்கும் வகையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட ‘டோரதி’ திரைப் படக்குழுவினர் அனைவரையும் உற்சாகப்படுத்தியும் மகிழ்வித்து அங்கு சில மணிநேரங்கள் தமிழ்க் கனடியர்களோடு ஊடக நண்பர்களோடும் உரையாடி மகிழ்ந்தனர்.

கனடாவில் இம்மாதம் 25ம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா-2026 ஐ சிற்ப்பிக்கும் வகையில் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட ‘டோரதி’ திரைப் படக்குழுவினர் அதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவர்களும் அங்கு கலந்து சிறப்பித்துஇங்குள்ள தமிழ் மக்களின் கலை மீதான ஆர்வத்தைப் பாராட்டினார்.
டுறம் கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ஊடகச் சந் திப்பிற்கு வருகை தந்த ‘டோரதி’ திரைப் படக்குழுவினர் அதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட அனைவரையும் ‘ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் நிறுவனர் செந்தூரன் நடராஜா மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

தொடர்ந்து அங்கு விசேட விருந்தினராகக் கலந்து கொண்ட ஒன்றாரியோ மாகாண அரசின் செயற்கை நுண்ணறிவு அமைச்சின் இணையமைச்சர் விஜேய் தணிகாசலம் அரசின் பாராட்டுச் சான்றிதழை அனைவருக்கும் வழங்கினார்.

அன்றைய தினம் அங்கு கூடியிருந்த அனைத்து திரைத்துறை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரின் கேள்விகளுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பானதும் விளக்கமானதுமான பதிலை அளித்தார். மேற்படி ‘டோரதி’ திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்படும் படங்கள் ஊடகச் சந்திப்பில் எடுக்கப்பட்டவையாகும்




















