Elephant House Canada Event | November 25, 2026
‘அட்டன் ஹோல்டிங்ஸ் இன்க்.’ (Atton Holdings Inc.) மற்றும் ‘சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி’ (Ceylon Cold Stores PLC) ஆகியவற்றின் சார்பாக, கனடாவின் ரிச்மண்ட் ஹில் (Richmond Hill, Ontario) பகுதியில், 2026 நவம்பர் 25, புதன்கிழமையன்று நடைபெறவுள்ள ‘எலிஃபண்ட் ஹவுஸ் கனடா’ (Elephant House Canada) நிகழ்விற்கு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் வரவேற்கப்படுகின்றனர்.
‘எலிஃபண்ட் ஹவுஸ்’ (Elephant House) என்பது இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிக்கப்படும் இனிதான பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்; இது பல தலைமுறைகளாக நீடித்த வரலாற்றைக் கொண்டது. இந்த நிறுவனம், இலங்கையின் மிகப்பெரிய பெருநிறுவனக் குழுமங்களில் ஒன்றான ‘ஜான் கீல்ஸ் குரூப்’ (John Keells Group)-ன் அங்கமான ‘சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி’ (Ceylon Cold Stores PLC)-க்குச் சொந்தமானது.
அதேவேளை ‘கிரேஸ் ஃபுட்ஸ் கனடா இன்க்.’ (Grace Foods Canada Inc.) நிறுவனம், கனடா முழுவதும் ‘எலிஃபண்ட் ஹவுஸ்’ பானங்களை விநியோகம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், கனடாவில் ‘எலிஃபண்ட் ஹவுஸ்’ நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, இலங்கையிலிருந்து வருகை தரும் ‘ஜான் கீல்ஸ் குழுமத்தின் சிரேஷ்ட உப தலைவர் திரு. சதீஷ் ரத்நாயக்க (Mr. Sathish Rathnayake) அவர்களை வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நிகழ்வில், கனடாவிலுள்ள இலங்கை இராஜதந்திர சமூகத்தின் பிரதிநிதிகள், ‘கிரேஸ் ஃபுட்ஸ் கனடா’ நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், நீண்டகால விநியோகஸ்தர்கள், வணிகப் பங்காளிகள் மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினர் மற்றும் பல்லின ஊடகங்களின் பிரதிநிதிகள்ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
நிகழ்வு விவரங்கள்
புதன்கிழமை, நவம்பர் 25, 2026 முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
நிகழ்வு இடம்பெறும் இடம்:- தி கிளப் ஹால் (The Club Hall)
1550 16th Avenue, Unit 1–3, Building A, Richmond Hill, ON L4B 3K9
இந்த நிகழ்வின் போது புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கும், ‘எலிஃபண்ட் ஹவுஸ்’ மற்றும் ‘கிரேஸ் ஃபுட்ஸ் கனடா’ நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேர்காணல் செய்வதற்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பெறும்
பல்லின ஊடக நிறுவனத்திலிருந்து எத்தனை பிரதிநிதிகள் கலந்துகொள்வார்களா என்பதையும், அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பெறுகின்றனர்.
அனைவரையும் வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கனடாவில் வாழும் இலங்கைச் சமூகத்தினருக்குத் தகவல்களை வழங்கி, அவர்களை ஒன்றிணைக்கும் பணியில் நீங்கள் ஆற்றிவரும் பங்களிப்பிற்கு நன்றி.
அன்புடன்
Stefan




















