உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து அதிகாலை ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர்.
















