நூற்றுக்கணக்கான வர்த்தகச் சாவடிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் சாவடிகள்
கனடாவில் இயங்கும் ‘அனைத்துலக தமிழர் பேரவை, உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடா கிளை உட்பட சில அமைப்புக்கள் மக்களைச் சந்திக்கும் நோக்கில் சாவடி அமைத்திருந்தன

கனடாவின் முன்னணி ஊடக நிறுவனங்களான TAMIL ONE TV மற்றும் S.V MEDIA ஆகிய நட்பு ஊடகங்களின் பிரமாண்டமான பல்சுவை திறந்த வெளி வீதிப் பெருவிழாவான ‘MEGA BLAST’ நேற்றும் 5ம் திகதி பிற்பகல் ஆரம்பமாகி இரவு 11.00 மணிவரை நடைபெற்றது.
பல்லின கலாச்சாரத்தை அடையாளமிட்டுக் காட்டிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் உட்பட அரசியல் தலைவர்களின் உ ற்சாக மான உரைகள் மற்றும்;சுவையான உணவுப் பதார்த்தங்களை வழங்கிய உணவகங்கள்- குளிர்பானங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சாவடிகள் என நேற்றைய தினம் கனடாவின் முன்னணி ஊடக நிறுவனங்களான TAMIL ONE TV மற்றும் S.V MEDIA இணைந்து நடத்திய திறந்த வெளித் தெ(பெ)ருவிழாவான ‘MEGA BLAST’ கலந்து கொண்டவர்கள் பேரானந்தத்தில் மூழ்கடித்தது என்றால் மிகையாகாது.
தமிழகத்திலிருந்து ச.ரி.க.ம.ப இசைப்போட்டியில் வெற்றியாளர்களான பவித்திரா. திப்பு சுசந்திகா மற்றும் சிறிஹரி உட்பட பல பாடக பாடகிகள் இசை மேடையை அலங்கரித்தார்கள். சுமார் 10 மணி நேர பெருவிழாவான இந்த ‘MEGA BLAST’ தமிழ் வண் அறிவிப்பாளர்களும் முக்கியஸ்த்தர்களுமான தனராஜ் மற்றும் பிரசாந்த் ஆகியோர் களைப்பின்றி தொகுத்து வழங்கினார்.
‘MEGA BLAST’ இன் இரண்டாவது நாளான 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் கம்பீரமாகத் தொடர்ந்தது. அன்றும் நூற்றுக்கணக்கான சாவடிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன என்பது முக்கியமான தகவலாகும். அன்றும் TAMIL ONE TV மற்றும் S.V MEDIA ஆகிய நட்பு ஊடகங்களின் தலைவர் ஶ்ரீ அவர்கள் மற்றும் சாமி அப்பாத்துரை அவர்கள் மேடையில் தோன்றி இந்த ‘MEGA BLAST’ தமிழ் வண் அறிவிப்பாளர்களும் முக்கியஸ்த்தர்களுமான தனராஜ் மற்றும் பிரசாந்த் ஆகியோரும் இணைந்து இறுதிவரை விழாவை சிறப்பாக நடத்திச் சென்று இறுதியில் நன்றி உரைக்கும் வேளையில் உற்சாகமும் உருக்கமும் கலந்த உணர்வைப் பகிர்ந்து கொண்டு விடைபெற்றனர்.
அத்துடன் அன்று இரவு 10.00 மணியளவில் நிறைவுற்ற ‘MEGA BLAST வை கண்டு களித்து விடைபெற்ற ரசிகர்கள் சென்ற பின்னர் அனைத்து தொண்டர்களும் ஒன்றாக இணைந்து பிரதான வீதியான செப்பர்ட் வீதியை சுத்தம் செய்து தடைகளை அகற்றி மாநகரசபை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இங்கே கா ணப்படும் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.
சத்தியன்























