பல்லின பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி நசான் துரையப்பா அழைப்பு!
எமது பிராந்தியத்திலுள்ள பல்லின மக்கள் சார்ந்த ஊடகங்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதில் பீல் பிராந்திய காவல்துறை தலைமையகம் மிகவும் ஆர்வமாக உள்ளது. ஏனெனில் எமது பீல் பிராந்தியத்தில் குற்றச் செயல மிகவும் அதிகரித்துள்ளன.
எமது பிராந்திய காவல்துறை நிர்வாகத்தில் தலைமை அதிகாரியான என்னுடன் சேர்ந்து நான்கு பிரதி தலைமை அதிகாரிகள் ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றுகின்றார்கள். அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழே ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பணியாற்றுகின்றார்கள். இருந்தும்.

எமது பிராந்தியத்தில் இடம் பெறும் வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல், வாகன கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறுதல், துப்பாக்கிச் சூடுகள், நிதி மோசடி அப்பாவி மக்களை ஏமாற்றுதல் வாகனத்தை அதி கூடிய வேகத்தில் செலுத்துதல். காவல் துறையினரை துச்சமென மதித்தல் அல்லது புறக்கணித்தல் ஆகிய குற்றச் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனவே இவை தொடர்பாக நாம் தென்னாசிய மொழிகள் மற்றும் ஏனைய பல்லினங்கள் பேசும் மொழிகள் சார்ந்த ஊடகவியலாளர்கள் எம்மோடு ஒத்தழைக்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்
”
இவ்வாறு கடந்த 16ம் திகதி புதன்கிழமை அன்று மிசிசாகா நகரில் அமைந்துள்ள பீல் பிராந்திய காவல்துறையின் தலைமைப் பணிமனையில் நடைபெற்ற பல்லின பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரி நிசான் துரையப்பா அழைப்பு விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பல்லின சமூகங்கள் வாழும் எமது பீல் பிராந்தியத்தில் பல்லினப் பத்திரிகையாளர்களின் சமூக ஈடுபாட்டை நாம் நன்கு அறிவோம். எனவே உங்களிடமிருந்து எமது பிராந்தியத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கும் ஆலோசனைகளை தொடர்ச்சியாக கருத்துக்களை செவிமடுக்க நாம் ஆர்வத்துடன் உள்ளோம்’ என்றார்.
மேற்படி சந்திப்பில் தமிழ் ஊடகங்கள் சார்பில் ‘உதயன்’லோகேந்திரலிங்கம் மற்றும் ‘தேசம்’ பத்திரிகை சார்பில் சங்கர் சிவநாதன் மற்றும் விசு கணபதிப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.




















