யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆராய்ச்சி பதவியில் கடமையில் பணியாற்றி வந்த நாகராசா சூரியகுமார் புதன்கிழமை அன்று (23.09.2026) நண்பகல் அரியாலை புங்கன்குளம் ரயில்வே கடவையில் இடம்பெற்ற விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் தனது மகளை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றவேளை ரயில் வந்ததை அவதானிக்காத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது 15 வயதுடைய மகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த இடத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடலை இருப்பதால் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் உரிய தரப்பினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
















