வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் 24ம் திகதி வியாழக்கிழமை அ ன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வனிதா சேனாதிராஜா, வவுனியா, கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினராகவும், அறியப்பட்ட கலை இலக்கிய ஆர்வலராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றிலிருந்தே இவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காகச் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரின் மரணம் தொடர்பான தீவிர விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















