‘அனைத்துலக தமிழர் பேரவை’ நடத்தும் ‘உலகத் தமிழ் ஆய்வு மாநாடு-2026 . நேற்று 15ம் திகதி கனடா- ஸ்காபுறோவில் கோலாகலமாக ஆரம்பமாகியபோது அமைப்பின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில் தெரிவிப்பு
(ஸ்காபுறோ சென்றானியல் உயர் கல்லூரி வளாகத்திலிருந்து ஆர்.என். லோகேந்திரலிங்கம்)
கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘அனைத்துலக தமிழர் பேரவை’ நடத்தும் ‘உலகத் தமிழ் ஆய்வு மாநாடு-2026 . நேற்று 15ம் திகதி வியாழக்கிழமை காலை தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்களாக விளங்கு பறை மற்றும் மேளம் வாத்தியங்கள் முழங்க கனடா- ஸ்காபுறோவில் கோலாகலமாக ஆரம்பமாகியது!
கனடாவைத் தலைமையகமாகக் கொண்டதும் உலகின் பல நாடுகளிலும் கிளைகளை கொண்டதுமான ;அனைத்துலக தமிழர் பேரவை’ ஏற்பாட்டில் நடைபெறும் ‘உலகத் தமிழ் ஆய்வு மாநாடு-2026 . இன்று 15-10-2026 அன்று வியாழக்கிழமை காலை கனடா- ஸ்காபுறோவில் உள்ள சென்றானியல் உயர் கலலூரி வளாக விழா மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது!
விழாவின் ஆரம்ப பகுதியை திரு குயின்றஸ் துரைசிங்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்.
அங்கு தலைமை உரையாற்றிய ;அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பின் தலைவரும் விழாக்குழுத் தலைவருமான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் மிகவும் காத்திரமானதும் உறுதி நிறைந்ததுமான உரை ஒன்றை ஆற்றினார்.
அவர் தனது உரையில் ‘நாற்பது வருட கால இடப்பெயர்வு மற்றும் புலம் பெயர்வு ஆகியவற்றுக்குப்பின்னர் ஈழத் தமிழர்கள் தற்போது உலகின் பல நாடுகளிலும் தங்களை மீளக் கட்டியெழுப்பி வர்த்தகத்திலும் கல்வியிலும் பொருளாரத்திலும் அறிவிலும் ஆற்றலில் உயர்ந்து நின்ற வண்ணம் உலகிற்கு வழிகாட்டுகின்ற அளவிற்கு பல்வேறு தளங்களில் நிமிர்ந்து நிற்கின்றனர. அந்த ஒ ற்றுமையையும் உறுதியையும் உயர்வையும் உலகத்தவர்களுக்கு காட்டும் வகையிலேயே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்
அவரைத் தொடர்ந்த அங்கு யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்துள்ள பேராசிரியர் அ. சண்முகதாஸ் உட்பட பல பேராசிரியர்களும் ஒன்றாரியோ மாகாண அமைச்சர்களில் ஒருவரான றேமன்ட் சோ அவர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் அ ங்கு உரையாற்றினர். இலங்கைப் பாராளுமன்ற உ றுப்பினர் குகதாசன் அ வர்களும் அங்கு சிறப்புரையாற்றினார்.
தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மொழி மற்றும் பண்பாடு கலை இலக்கியம். வாழ்வியல் தொடர்பான தலைப்புக்களில் உரைகளும் ஆய்வு மன்றங்களும் இடம்பெறவுள்ளன.
மலேசியாவிலிருந்து எழுத்தாளரும் பேச்சாளரும் மாநாட்டின் விழாக்குழுவில் முக்கிய பங்குவகிப்பவருமான இராஜேந்திரன் பெருமாள், இலங்கை ‘வீரகேசரி’ பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள், இலங்கையிலிருந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் அவர்கள்,மற்றும் பிரான்ஸ் தேசத்தில் வாழும் ஈழத்தின் ‘பிறவிக்’ கலைஞர்களான புகழ்பெற்ற தயாநிதி மற்றும் குணபாலன் (நையாண்டி மேளம் புகழ்) உட்பட பலர் தற்போது கனடாவின் ரொறன்ரோ மாநகருக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்த பிரமாண்டமான நான்கு நாள் மாநாடு தொடர்ச்சியாக மிகுந்த பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடு நான்கு நாட்களும் இடம்பெறும் மண்டபங்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
15ம் திகதி வியாழக்கிழமை: காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை
Centennial College Event Centre- 937 Progress Ave, Scarborough
16ம் திகதி வெள்ளிக்கிழமை: காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை
Centennial College Event Centre- 937 Progress Ave, Scarborough
17ம் திகதி சனிக்கிழமை:
காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5..00 மணி வரை
Centennial College Event Centre- 937 Progress Ave, Scarborough.
மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணிவரை
கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சி
Metropolitan Centre , 3840 Finch Avenue East Scarborough
18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை: ;அனைத்துலக தமிழர் பேரவை’ அமைப்பின் இராப்போசன விருந்து
மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 11..00 மணி வரை
Durham Convention Centre, 30 Beck Crescent ,Ajax
தகவல்: சத்தியன்































