மேரி கியூரி போல் அவர்கள் கத்தோலிக்க பாடசாலைகளின் கல்விச் சபை உறுப்பினராக போட்டியிடுகிறார். இவர் மருத்துவர் போல் ஜோசேப் அவர்களின் புதல்வர் ஆவார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியதோடு, பல் மருத்துவரான இவர் தமிழிலும் முதுமானி பட்டம் பெற்றுள்ளார். இங்குள்ள பல்வேறு தமிழ் சமூக அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி பணியாற்றி வருவதோடு,மாணவர்களுக்கான தமிழ் மொழி பயிற்சியிலும் ஆசிரியராக திகழ்வதோடு, மொழி சார்ந்த ஆய்வு கட்டுரைகள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். இவரின் சில ஆய்வு கட்டுரைகளை தமிழகத்தின் பல பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டாக தங்கள் ஆய்வுகளிலும் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உள்ள தமிழ் சார்ந்த கருத்தரங்குகளிலும் இணையவழியிலும் உரைகளாற்றி வருகின்றார். Scarborough North மற்றும் ஸ்காபுறோ Rouge Park இந்தப் பகுதியில் ரொரன்ரோ கத்தோலிக்க கல்விச் சபையின் அறங்காவலர் பதவிக்கு போட்டியிடுகிறார். தமிழ் சமூகமாக இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம்.
















