(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவர் அநாதரவாக பரிதவிக்க விட்டு சென்ற நிலையில் அவரை பொலிசார் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் 26ம் திகதி வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மனித நடமாட்டம் இல்லாத வீதியில் குறித்த பெண்ணை இனம் தெரியாதோர் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்
இதன் போது கடும் நோயால் அவதிப்பட்டு அநாதரவாக பரிதவித்துக் கொண்டிருந்த பெண்ணை பிற்பகல் 1.00 மணியளவில் மீட்டு 1990 அம்புலன்ஸ் வரவழைத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
















