
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
வாய்ப்புகள் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். திருமண வாய்ப்பு கூடும். நல்லவர் நட்பு கிட்டும். எதிரிகள் பலம் குறையும். கலைத்துறையில் முன்னேற்றம் கொடுக்கும். உதவும் குணம் அதிகரிக்கும். பழையக் கடன் தீரும். தொலைபேசி தகவல் தொல்லைத் தரும். விநாயகர் வழிபாட்டால் வீண்பழி அகலும்.
அதிர்ஷ்ட எண் – 7, 9, 0, 1; அதிர்ஷ்ட நிறம் – கிளிப்பச்சை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – D, Q;
ரிஷபம் :
நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். ஆடம்பர பொருள் சேரும். திருஷ்டிகள் விலகும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் உதயமாகும். காரியம் கைகூடும். செல்வச் செழிப்பு உயரும். விவேகம் கை கொடுக்கும். வெற்றி வீடு தேடி வரும். பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அற்புதங்கள் நிகழும். லஷ்மி கடாட்ஷம் பெருகும்.பிராணிகளால் தொல்லை ஏற்படும். பெண்களால் பெருமை சேரும். பாத விநாயகர் வழிபாடு பாவம் போக்கும்.
அதிர்ஷ்ட எண் – 0,3,7,2 ; அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்– I, Z
மிதுனம் :
வி.ஐ.பி.யின் தொடர்பு கிட்டும். எதிர்பார்த்த தொகை தாமதமாகும். திடீர் செலவு ஏற்படும். புது முயற்சிகள் தள்ளி வைக்கவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். களவுப் போன பொருள் திரும்ப கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை. மாற்று இன நட்பு பெருகும். வயிற்று உபாதை வந்து போகும். வங்கி சேமிப்பு உயரும். குபேர வழிபாடு மேன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் – 8, அதிர்ஷ்ட நிறம் – 7,2,5,3; வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – E, V;
கடகம் :
சோம்பல் அதிகரிக்கும் . கடல் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். குடும்ப அன்யோன்யம் பலப்படும். உத்தியோக உயர்வு கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. அலைபேசி தகவல் ஆதாயம் தரும். பயணம் வெற்றி தரும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். நண்பர்கள் பிரிவு ஏற்படும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் – 4,7,8,2; அதிர்ஷ்ட நிறம் – வைலட், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – U, L;
சிம்மம் :
இக்கட்டான சூழ்நிலைகள் அகலும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்பு உருவாகும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. உத்தியோக உயர்வு உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை. மெத்தனப் போக்கு மாறும். சுய தொழில் வாய்ப்பு அமையும். சுபசெய்தி வரும். சந்தர்பங்கள் சாதகமாக அமையும். தீப வழிபாடு தீமை அகற்றும்.
அதிர்ஷ்ட எண் –2,1,0,0 ;அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – T, D;
கன்னி :
பழையக் கடன் வசூலாகும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஸ்டேஷ்னரி தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். ஆடை, ஆணிகலன்கள் சேரும். மனச் சஞ்சலம் ஏற்படும். பகையாளியிடம் எச்சரிக்கை தேவை. பழைய கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும்.மருத்துவ செலவு அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெளிநாட்டுப் பயணம் உருவாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். அம்பிகை வழிபாடு ஆறுதல் தரும்.
அதிர்ஷ்ட எண் – 8,4,1,6; அதிர்ஷ்ட நிறம் – இந்திர நீலம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – M, B
துலாம் :
மனநிறைவு உண்டாகும். மனைவியால் மருத்துவச் செலவு ஏற்படும். வினோதமான எண்ணங்கள் விலகும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும்.பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலன்தரும். புண்ணிய ஸ்தலம் செல்ல வேண்டிவரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். சட்டம் சாதகமாகும்.ஷேர் மார்க்கெட் லாபம் தரும். பஞ்சபூத வழிபாட்டால் பணவரவு உண்டு.
அதிர்ஷ்ட எண் – 5,3,9,1; அதிர்ஷ்ட நிறம் – ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – R, G;
விருச்சிகம் :
கற்பனை வளம் கூடும். கௌரவம் உயரும். புதிய முதலீடு செய்வார்கள்.கமிஷன் தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் பெருமை சேரும். கலைத்தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். மதிப்பு உயரும். மாற்று இனத்தவர் வாழ்த்துகிட்டும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப ஒற்றுமை கூடும். முயற்சிகள் வற்றி தரும். காதல் கைகூடும். விவாக முயற்சி வெற்றி தரும். போட்டிகள் மறையும். நந்தி வழிபாட்டால் நல்லோர் வாழ்த்து கிட்டும்.
அதிர்ஷ்ட எண் – 1,4,7,3; அதிர்ஷ்ட நிறம் – யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S, F;
தனுசு :
சிறப்புக்கள் சேரும் நாள். நல்லோர்களின் நட்பு கிட்டும். விடா முயற்சி அவசியம். புதிய முதலீடு தவிர்க்கவும். சுபச் செலவு அதிகரிக்கும். பொறுப்புக்கள் கூடும். வேலைபளு அதிகரிக்கும். உறவினரால் பண விரயம் உண்டு. உடல் உபாதை நீங்கும். வியாபாரத்தடை ஏற்படும். பங்குச் சந்தை லாபம் தரும். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். உங்கள் தனித்தன்மை வெளிப்படும். அர்ச்சனையால் பிரச்சனை குறையும்.
அதிர்ஷ்ட எண் – 2,5,1,9; அதிர்ஷ்ட நிறம் – குங்கும கலர், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – R, D;
மகரம் :
சேமிப்பு உயரும். நோய் நொடிகள் அகலும். சேய் நலம் கூடும். வீண் வம்புகள் அகலும். வழக்குகள் வெற்றி தரும். விபரீத எண்ணங்கள் விலகும். நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்ப நலம் மகிழ்ச்சி தரும்.சச்சரவுகள் அகலும் நாள். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை உண்டு. உத்தியோகத்தில் கவனம் தேவை. வாய்ப்பேச்சில் நிதானம் தேவை.வருமானம் உயரும் கடவுள் பிராத்தனை கை கொடுக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9, 7, 1, 0; அதிர்ஷ்ட நிறம்: வாடாமல்லி, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: O,N;
கும்பம் :
மனைவியால் அமைதி கெடும். முக்கிய எண்ணம் நிறைவேறும். உடன் பிறந்தோரால் உதவி கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டு. ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. சுபக்காரியச் செய்தி வரும். வேலை திறன் அதிகரிக்கும். தொழில் மாற்றம் ஏற்படும். சோதனைகள் நீங்கும். தொலை பேசி தகவல் நல்ல செய்தி தரும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். மனம் மகிழும் நாளாக அமையும். உள்ளம் பூரிப்படையும்.உளுந்து தானம் சிறந்த பலன் சேர்க்கும்.
அதிர்ஷ்ட எண்: 0, 7, 3, 2; அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: P, E;
மீனம் :
மேலதிகாரியின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சஞ்சலம் உண்டு. தனவரவில் தாமதம் உண்டு. தகுதியில் மேன்மை உண்டு. ஏற்றுமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. கனவு தொல்லை உண்டு. காதலால் மகிழ்ச்சி உண்டு. மங்களமான நாள். வீண் பேச்சை தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கவலைகள் குறையும். கல்வியில் ஏற்றம் உண்டு.கணபதி வழிபாட்டால் காரியம் கை கூடும்.
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7, 3; அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, Z;





















