ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, ஒன்றாரியோவின் Minister of Children, Community and Social Services • Dr. Merrilee Fullerton அவர்களது பாராளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பாராளுமன்றச் செயலாளர் பதவியை லோகன் கணபதி அவர்களுக்கு வழங்கும் அரச வைபவத்தில் நேற்று மாலை ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான ‘குயின்ஸ் பார்க்’ கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் முன்னிலையில் லோகன் கணபதி அவர்கள் திருக்குறள் நூலில் சத்தியம் செய்து பதவியை ஏற்றுக் கொள்வதை இங்கு காணலாம். அத்தடன் பதவியேற்புக்கு பின்னர் ஏனைய மாகாண அமைச்சர்கள் நண்பர்கள் ஆகியோரோடு அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் இங்கு காணப்படுகின்றது.
படங்களும் செய்தியும் – சிவா