ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் ஒன்றாரியோவின் Minister of Infrastructure, with an additional mandate for government real estate Kinga Surma வின் பாராளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பாராளுமன்றச் செயலாளர் பதவியை விஜேய் தணிகாசலம் அவர்களுக்கு வழங்கும் அரச வைபவத்தில் நேற்று மாலை ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றமான ‘குயின்ஸ் பார்க்’ கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் முன்னிலையில் விஜேய் தணிகாசலம் அவர்கள் திருக்குறள் நூலில் சத்தியம் செய்து பதவியை ஏற்றுக் கொள்வதை இங்கு காணலாம். அத்தடன் பதவியேற்புக்கு பின்னர் ஏனைய மாகாண அமைச்சர்கள் ஆகியோரோடு அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்கள் இங்கு காணப்படுகின்றன