கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கும் நாளன்று ஆரம்பித்து தொடர்ந்து 25 நாட்கள் உற்சவம் கடந்த பல வருடங்களாக கனடா ஸ்காபுறோவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இங்கு நடைபெறும் இரதோற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியார்கள் யாழ்ப்பா நல்லூர் கந்தன் ஆலயத்தின் இரதோற்சவத்தை கண்டு களித்து பக்தியொடு உருகுவதைப் போன்று உணர்வதாக முருக பக்தர் ஒருவர் தெரிவித்தார்.