கனடா ஒன்றாரியோ மாகாண கல்வி அமைச்சர் கௌரவ Stephen Lecce, புகழாரம்
ஒன்றாரியோ அரசு சார்ந்த பயனுள்ள செய்திகளையும் தகவல்களையும் தொடர்ச்சியாக தாங்கி வரும் உதயன் பத்திரிகையுின் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து அதன் ஆசிரியரையும் பாராட்டுவதில் நான் உவகை கொள்கின்றேன். கனடா உதயன் பத்திரிகையின் செய்திச் சேவை மற்றும் அதன் சமூகப் பணி ஆகியவற்றை நானும் எனது சக அமைச்சர்களும் மாகாண அரசின் உறுப்பினர்களும் அறிந்துள்ளோம். எனவே ஒன்றாரியோ அரசு சார்ந்த பயனுள்ள செய்திகளையும் தகவல்களையும் தொடர்ச்சியாக தாங்கி வரும் உதயன் பத்திரிகையின் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து அதன் ஆசிரியரையும் பாராட்டுவதில் நான் உவகை கொள்கின்றேன்’
இவ்வவாறு தெரிவித்தார் கனடாவில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமாக ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வரும் ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் Hon Stephen Lecce, அவர்கள்.
நேற்று 9ம் திகதி செவ்வாய்க் கிழமையன்று மாலை தனது மாகாண அரசின் சகாக்களான அமைச்சர் றேமன்ட் சோ. மாகாண அரசின் உறுப்பினர்களான திருவாளர்கள் அரிஸ் பாபிகியன், லோகன் கணபதி. விஜய் தணிகாசலம் ஆகியோர் சகிதம் வருகை தந்து பாராட்டுரை வழங்கியபோது. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கனடா உதயன் பத்திரிகையின் 25வது ஆண்டு வெள்ளி விழாவில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் கல்வி அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும். அவரால் அன்று கலந்து கொள்ள இயலவில்லை.
எனவே ‘உதயன்’ அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டும் என்ற அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்பவே இந்த சிறிய நிகழ்வு உதயன் சந்தைப்படுத்தல் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அழைக்கப்பட்ட ‘உதயன்’ நண்பர்கள். வர்த்தக அன்பர்கள். சமூகத் தலைவர்கள். மாணவர்கள் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் உதயன் விளம்பரதாரர்கள் என குறிப்பிட்ட எண்ணிக்கையுடையவர்களே அங்கு கலந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
அமைச்சர் உட்பட அனைவரும் கலந்து கொண்ட அனைவரோடும் மிகவும் நெருக்கமாக உரையாடி மகிழ்ந்தனர்.
ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் Hon Stephen Lecce, அவர்கள் மற்றும் மாகாண அரசின் சகாக்களான அமைச்சர் றேமன்ட் சோ. மாகாண அரசின் உறுப்பினர்களான திருவாளர்கள் அரிஸ் பாபிகியன், லோகன் கணபதி. விஜய் தணிகாசலம் ஆகியோர் பூக்கொத்து மற்றும் பொன்னாடைகள் ஆகியன வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டனர். இவைகள் மாணவ மாணவிகளாலும் வர்த்தக மற்றும் சமூகம் சார்ந்த நண்பர்களாலும் வழங்கப்பெற்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
–படங்களும் செய்தியும்; சத்தியன்——-
Yesterday was an important and remarkable day for our UTHAYAN Tamil Newspaper in last 25 years in Publishing and serving the Community.
Ontario’s current Minister of Education Minister Hon Stephen Lecce, along with, Ontario’s Minister of Seniors and Accessibility, Hon Raymond Cho, Mr. Aris Babikian MPP for Scarborough- Agincourt, MPP for Markham-Thornhill Mr. Logan Kanapathy and MPP for Scarborough – Rouge Park Mr. Vijay Thanigasalam, made a visit to our UTHAYAN’s Marketing Office in Scarborough.
The purpose of the visit was to congratulate the success and it’s 25th anniversary Celebrations.
Ministers and MPPs, presented greeting scrolls to the Editor in Chief Logendralingam.தYesterday was an important and remarkable day for our UTHAYAN Tamil Newspaper in last 25 years in Publishing and serving the Community.



























































