ஜீவா நடித்த ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி உள்ளது. இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜீவாவின் 47வது படமாக உருவாகி வருகிறது. முன்னதாக ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்திற்கு பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா – ராஜேஷ் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலரும் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் பதாகை வெளியாகி உள்ளது. முன்னோட்டம் ஜூன் 21ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.






















