ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் 20 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் நுரிஸ்தான் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தின் பரன் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் ஆப்கானிஸ்தானில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


















