மனிதனுக்கு சிறிஸ்டிக்கும் திறமை இந்த உலகத்தில் கிடையாது. மனிதன் “நாமே சிறிஸட்டிக்கிறோம்” என்று நினைத்துக் கொள்கிறான். உதாரணமாக ஒரு மேஜை செய்ய வேண்டும் என்றால் அதற்கு தேவையான மரம் மற்றம் இரும்பு தேவைப்படுகிறது. அது எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? கடவுள் மனிதனுக்கு கொடுத்ததுதான். மனிதன் அதற்கு மெருகேற்றி தனக்கு வேண்டியதை செய்து கொள்கிறான். மனிதனாகவே இரும்பை கண்டுபிடிக்க முடியாது அதே மாதிரி எந்த ஒரு பொருளாக பெட்ரோலாக இருக்கட்டும் அல்லது டீசலாக இருக்கட்டும் செயற்கை நுண்ணறிவான ஏஐயாக இருக்கட்டும் அல்லது கணனி பொருட்களாக இருக்கட்டும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் கடவுள் கொடுத்த மூலப்பொருளை வைத்துதான் மனிதன் அந்தந்த பொருட்களை செய்ய முடியுமே தவிர, மனிதனாக தனியாக எதையும் உருவாக்க முடியாது.
ஆனால் மனிதன் இந்த பொருளை நான்தான் உருவாக்கினேன் என்று தற்பெருமை அடித்துக் கொள்கிறான். ஆனால் கடவுள் கொடுத்த அறிவு ஞானம் இல்லாமல் எந்த மனிதனாலும் எதையும் செய்ய முடியாது. நமது உடலையே உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டேமேயானால் நமது மூளை என்பது மனிதன் கண்டுபிடித்து வைத்திருக்கின்ற எல்லா கணணிகளையும்விட மேலானது. நமது மூளைக்கு ஏற்றவாறு ஒரு கம்யூட்டரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உயிரை கண்டுபிடிப்பேன் என்று மனிதன் சொல்கிறான். உயிர் உடம்பில் எங்கே இருக்கிறது? என்று அவனால் சொல்ல முடியாது.
இன்னும் இறைவனின் அநேக படைப்பில் அநேக விநோதங்கள் இருக்கிறது. வேதங்களை பார்த்தோமானால் நான் படைத்த படைப்புகளை பாருங்கள் என்று இறைவன் கூறுகிறான். அவன் படைத்த படைப்புகளை நாம் பார்க்கும்போது மனிதர்கள் எல்லோரையும்விட கடவுள்தான் பெரியவன் என்றும் கடவுள்தான் அனைத்து மூலப்பொருட்களையும் கொடுத்திருக்கிறான் என்ற உண்மை புலப்படும். கடவுளை நாம் உணர்ந்து கொண்டால் நமக்கடையே உள்ள வீண் பெருமைகள் விலகிவிடும். கடவுளை சார்ந்து ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும். வீணான பெருமையை வைத்துக் கொண்டு நான்தான் இதை செய்தேன் நான்தான் அதை செய்தேன் என்று செல்வதில் எந்த பிரயோசணமும் இல்லை. கடவுளுடைய உதவியோ கடவுளுடைய கிருபையோ இல்லாமல் மனிதன் கிடையாது. மனிதன் கடவுளை சார்ந்து வாழ்வதற்கே படைக்கப்பட்டவன்.
அதனால் நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் கடவுளுக்காகவும் கடவுளை சார்ந்து வாழ்வதற்க்காவுமே இருக்க வேண்டும் என்ற கொள்கையை மனுஜோதி ஆசிரமம் செய்து வருகிறது என்றார். அப்படியானால் சைத்தானையும் இறைவன்தானே படைத்திருக்கின்றான் என்ற கேள்விக்கு பதிலளித்த லியோ, கடவுளின் சபையில் சைத்தானும் ஒருவன்தான். நான்தான் மனிதனைவிட பெரியவன் என்ற அவனது தற்பெருமையால்தான் பிரச்சனையை ஆரம்பித்தது. இன்று மனிதர்கள் செய்யக்கூடிய தவறும் அதுதான். கடவுள் படைப்பில் சைத்தான் கடவுளுக்கு பிரியமானவாகவும் நெருக்கமானவனாகவும் இருந்தான். அதனால் அவனுக்கு தலைக்கணம் தலைவிரித்தாடியது.
சைத்தான் தனக்கு கீழ்படியாமல் போனதினால்தான் அவனை கடவுள் விரட்டியடித்தார். அப்போது உன் நல்லடியார்களை வழிகேடுப்பேன் என்று கூறினான். கடவுளின் தன்மை தனக்கும் இருப்பதாக கருதியதின் விளைவே அவன் சொர்க்கத்தைவிட்டு விரட்டப்பட்டான். தனக்கும் உயிர் கொடுக்க முடியும் என்று அவன் எண்ணினான். ஆனால் உயிர் கொடுக்கக்கூடியவன் இறைவனை ஒருவன்தான். இறைவன் எண்ணினாலோழிய மற்றவர்கள் எவராலும் மனிதனுக்கு உயிர் கொடுக்க முடியாது. அப்படி மற்றவர் ஒருவருக்கு உயர் கொடுத்து விட்டால், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவன் வைக்கும் சோதனையாகும். அந்த சோதனையானது என்னவென்றால், இறை நம்பிக்கையாளன் தன்னை நம்புகிறானா? அல்லது சைத்தானை நம்புகிறானா? என்ற சோதனையாகும் என்று மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் சி.லாறி கூறினார்.


















